உலக பேமஸான McDonald நிறுவனத்தையே அலறவிட்ட தக்காளி.. விலையால் அதிர்ச்சி முடிவு - அதிருப்தியில் கஸ்டர்மர்கள்

x

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தக்காளி விலையால், மக்கள் படும் அவதியையும், அக்கப்போறையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சமையல் அறையில் தக்காளி இருக்கிறதோ இல்லையோ, சமீப காலமாக தலைப்பு செய்திகளில் கட்டாயம் இருந்து விடுகிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் புது, புது அப்டேட்டுகளுடன் அதகளப்படுகிறது தக்காளி.

இந்நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களில் சதமடித்துள்ள தக்காளியின் விலை, வட மாநிலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் உத்தர்காண்ட் மாநிலத்தில் 1 கிலோ தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனையாகி ஷாக் கொடுத்துள்ளது.

விண்ணைமுட்டும் விலையால், மக்கள் தக்காளி வாங்குவதை அறவே தவிர்த்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இப்படி விலையேற்றத்தால் வாங்க ஆளில்லை என்று வியாபாரிகள் ஒருபுறம் வருத்தம் தெரிவிக்க, மற்றொரு புறம் தக்காளி திருட்டு போய்விடுமோ என்ற பயத்தில் சில வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

தெலங்கானாவில் ஏற்கனவே 20 மூட்டை தக்காளிகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரங்கேறியது, ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த நேரத்தில் களவாடி சென்றதாக விவசாயி கண்ணீர் விட்டு கதறினார்.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள கர்நாடகாவில் ஒரு தோட்டத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பழுத்து தொங்கிய சுமார் 2.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளிகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது போன்ற அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களால், அச்சத்தின் உச்சிக்கே சென்ற தெலங்கானா வியாபாரி ஒருவர், தக்காளிகள் வைத்துள்ள இடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

மற்ற இடங்களை போல் தன் கடையிலும் திருடு போக கூடாது என, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

தக்காளியின் தாறுமாறு விலையால் பல பகுதிகளில் தக்காளி சட்னிகளை ரத்து செய்தது போல், உலகளவு பிரபலமடைந்த மெக் டெனால்ட்ஸ் நிறுவனத்தின் டெல்லி கிளையில், உணவில் தக்காளிகள் தவிர்க்கப்படும் என அறிவித்துள்ளது.

போதுமான அளவு தக்காளி கிடைக்காததால், தக்காளி இல்லாத உணவு பொருட்கள் தான் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் மீம்களை அள்ளி குவித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் விலையேற்றத்தால் வருத்தத்தில் இருக்க, சில ட்ரெண்ட் செட்டர்கள் தக்காளி விலை குறித்து பாட்டெழுதி நடனமாடி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

என்னதான் கேலி கிண்டல்கள் ஒரு புறம் இருந்தாலும், தக்காளி விலை இன்னும் 40 நாட்கள் வரை குறைய வாய்ப்பில்லை என்றேஎ என்றே கூறப்படுகிறது.

விலையேற்றத்தால் பாடாய் படும் மக்களின் நலன் கருதி, குறைந்த விலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது


Next Story

மேலும் செய்திகள்