"படகு அப்படியே முழிகிடுச்சு.." சட்டென குதித்து 6 பேரை காப்பாற்றிய வீரர்.. கேரளா படகு விபத்து

x

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் அருகே உள்ள தனூர் கடற்கரையில் பயணிகள் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். 18 முதல் 20 பேர் பயணிக்கும் படகில் 35க்கும் அதிகமானோர் பயணித்ததே விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது... மேல் தளத்தில் இருந்த நபர்கள் படகின் ஒரே பக்கத்தில் நின்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மீன்பிடிப் படகை சுற்றுலாப்படகாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து படகின் உரிமையாளர் தனூரைச் சேர்ந்த நாசர் மீது ஜாமீன் இல்லா பிரிவின் கீழ் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி நடந்ததை போலீசார் உறுதி செய்தனர். மீட்பு பணியானது விடிய விடிய நடைபெற்றது. இதில் தீயணைப்புத் துறையினர், என்டிஆர்எப் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியை பார்வையிட வந்த கேரள காவல்துறை ஏடிஜிபி எம்.ஆர் அஜித் குமார் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும், மீட்புக் குழு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்