#Breaking || டாஸ்மாக்கை மூடும் நேரத்தில் மாற்றமா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரி வழக்கு...
தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் குற்றச்சம்பவங்கள் நடப்பதாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் வழக்கு
மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை திறந்துவைக்கலாம் என அனுமதிக்கப்படுவதால், மதுபானம் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்யலாம் - மனு...
வழக்கு விசாரணையை ஜனவரி 4 தள்ளிவைப்பு...
Next Story