இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ | BCCI | Indian Team
பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கு திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ கூண்டோடு கலைத்து, புதிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரியது. இதற்கு சேத்தன் சர்மாவும் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில், வீரர்கள் தேர்வுக் குழுத் தலைவராக சேத்தன் சர்மாவையே மீண்டும் பிசிசிஐ தேர்வு செய்து உள்ளது. 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதனடிப்படையில் 11 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டதாகவும் பிசிசிஐ கூறி உள்ளது. தேர்வுக் குழுவின் உறுப்பினர்களாக குஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோரை புதிதாக பிசிசிஐ தேர்வு செய்து உள்ளது.