காதல் ஜோடிகளின் சித்து விளையாட்டு... "கடற்கரையில் இனிமேல் இதற்கு தடை.." சோகத்தில் 'Couples' - அரசு போட்ட அதிரடி உத்தரவு
நெதர்லாந்து நாட்டில் பீச்சில் உடலுறவு தடை செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு பதாகைகளை வைத்துள்ளது பெரும் பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
கடற்கரை என்றாலே அனைவருக்கும் அழகிய கடற்கரை மணலும்,நமது பாதங்களை வருடி செல்லும் கடல் அலைகள் தான் ஞாபகத்திற்கு வரும். விடுமுறை நாட்களிலோ அல்லது மன அமைதிக்காகவும் கடற்கரையில் நேரத்தை செலவிட நாம் பலர் விரும்புவோம்.
ஆனால், சில சமயங்களில் கடற்கரையில் நாம் பார்க்கவே முடியாத சில அருவருக்கத்தக்க காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கும். இதற்காகவே கடற்கரை பக்கம் போனாலே பலரும் முகம் சுழிப்பார்கள். நம்ம ஊர் கடற் கரையிலேயே இப்படி என்றால் வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்!
நெதர்லாந்து நாட்டு கடற்கரையில் அத்துமீறும் சில ஜோடிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது அந்நாட்டுஅரசு.
தெற்கு நெதர்லாந்து நாட்டில் உள்ள வீரே என்ற பீச்சில் சில ஜோடிகள் அனைவருக்கும் முன் அத்துமீறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படி அடிக்கடி பொது இடத்தில் இவர்கள் நெருக்கமாக இருக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அங்கு வரும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது எந்தளவுக்கு மோசமாகிவிட்டது என்றால் அந்நகர நிர்வாகம் பீச்சில் உடலுறவு வைப்பதைத் தவிருங்கள் என்று பிரசாரம் செய்யும் அளவுக்கு மோசமாகிவிட்டது. மேலும், அங்குள்ள கடற்கரைகளில் இது குறித்த எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டு, கடற்கரைகளில் கண்காணிப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் கடற்கரையில் நிர்வாணமாக சன் பாத் எடுக்கவரும் அனைவரும் இதுபோல அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவது இல்லை என்றும், அரசின் இந்த திடீர் உத்தரவால் தாங்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக சன் பாத் பிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் உடலுறவு கொள்பவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறும் அவர்கள் நிர்வாணமாக சன் பாத் எடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் தெரிவித்துள்ளனர்.