இன்றைய தலைப்பு செய்திகள் (13-10-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்...சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்.
ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு...ஹிஜாப் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை....ஹிஜாப் தடை செல்லும், செல்லாது என இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.
மாணவி கொலை - 4 தனிப்படைகள் அமைப்பு.. சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து மாணவி தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம்..குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலிசார் சார்பில் டி.எஸ்.பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு.
ஆங்கில வழி கல்வி நிறுத்தம் - பெற்றோர் போராட்டம்...திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி திடீரெனநிறுத்தம்...பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெற்றோர்.
2849 முதுகலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை...பள்ளிக்கல்வித்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 270 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
46,000 சார்ஜிங் பாயிண்ட் - இந்திய ரயில்வே முடிவு...2030-ஆம் ஆண்டுக்குள் 46,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்...ரயில் நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் உருவாக்க இந்திய ரயில்வே முடிவு.
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு....சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்.