இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இந்திய- சீன உறவை சீராக்க எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை மதிப்பதும் கடைபிடிப்பதும் அவசியம்...

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி வலியுறுத்தல்...

இனம் - மொழி - நாட்டு உரிமை காக்க ஆன்மீக ஆளுமைகள் தங்களது பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும்...

மொழி, தமிழர்கள், தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும்... அப்போது தான், மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கத்தேர் இழுத்தார்...

ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்து வழிபாடு...

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பொன்முடிக்கு பேச வாய்ப்பு வழங்காத‌தால் சர்ச்சை...

பட்டங்களை வழங்கிவிட்டு உரை நிகழ்த்தாமல் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

"கோப்புகளை திருப்பி அனுப்புவதையே ஆளுநர் வாடிக்கையாக வைத்துள்ளார்..."

உரிமைக்கு குரல் கொடுத்தே தீருவோம்... மாநில சுயாட்சியில் உறுதியாக இருப்போம் என்றும் அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டம்...



Next Story

மேலும் செய்திகள்