தேர்தலில் தோற்ற அண்ணாமலை முன்பாக நிற்கனுமா... - பாஜகவை விமர்சித்த ஜெகதீஷ் ஷெட்டர்

x

ஒரு தேர்தலிலும் வெற்றியடையாத அண்ணாமலை முன்பாக நாங்க நிற்கனுமா என பாஜகவிலிருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியை விமர்சனம் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் கர்நாடக மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாஜக முன்னாள் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்திருக்கும் ஜெகதீஷ் ஷெட்டர், தன்னை போல் கட்சியில் 6, 7 முறை போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்கள் ஏராளம், ஆனால் ஒரு தேர்தலிலும் வெற்றிப்பெறாத அண்ணாமலையை, கட்சி பொறுப்பாளராக்கியது என ஆதங்கம் தெரிவித்துள்ளார். தானும் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும் பின்னால் இருக்க, அண்ணாமலை முன்னாள் அமர்ந்திருந்தார் எனக் குறிப்பிட்ட ஷெட்டர், தாங்கள் அமைச்சராக இருந்தபோது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை முன்பாக ஏதோ குழந்தைகளை போல அமர்த்தப்படியிருந்தோம், எதற்கு இந்த அவமதிப்பு எனவும் கேள்வியை எழுப்பியிருக்கிறார். தமிழக பாஜக தலைவராக்கப்பட்ட அண்ணாமலையால் தமிழகத்தில் வெறும் 4 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்