"ஒரு லிட்டர் டீசலுக்கு 25 ரூபாய் மானியம்" - கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் அறிவிப்பு

x

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தால் மீன பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டிவரும் ராகுல் காந்தி, உடுப்பியில் மீனவர்கள் மத்தியில் பேசுகையில் மீனவர்களை கவரும் வகையிலான முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார். காங்கிரஸ் மீனவர்கள் நலனை பாதுகாக்கும் என உறுதியளித்த ராகுல் காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தால் மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் உயிர் காப்பீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். மீன பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் வட்டியில்லாத கடன் வழங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 லிட்டர் வரையில் லிட்டருக்கு 25 ரூபாய் மானியத்தில் டீசல் வழங்கப்படும் எனவும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் உருவாக்கப்படும் எனவும் ராகுல் காந்தி மீனவர்களுக்கு வாக்குறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்