கர்நாடகா யாருக்கு?.. பாஜகவா? காங்கிரஸா? - வெளியானது சி வோட்டர் கருத்துக்கணிப்பு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. அப்படி கர்நாடக தனியார் தொலைக்காட்சியும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் அதிகப்பட்சமாக காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக 79 முதல் 89 தொகுதிகளிலும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 தொகுகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.