கர்நாடகாவில் சூறாவளி பிரச்சாரம்..."3.5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி ஊழல்" - பாஜக ஆட்சி மீது பிரியங்கா குற்றச்சாட்டு
கர்நாடகா மாநிலம் சிக்கமங்களூரு அருகே சிருங்கேரியில் உள்ள சாரதா அம்மன் மடத்தில் பிரியங்கா காந்தி வழிபட்டார். பின்னர், கோயில் யானைக்கு ஆப்பிள் பழங்களை வழங்கி, ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்த அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். இரண்டரை லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ளதாக கூறிய அவர், அரசுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடத்துள்ளதாக புகார் தெரிவித்தார். விருப்பாச்சப்பா மகன் 8 கோடி ரூபாய் லஞ்ச பணத்துடன் கைது செய்யப்பட்ட பிறகும், பேரணி செல்வதைப் பார்த்தால், தங்களை எதிர்த்து கேட்க யாரும் கிடையாது என்ற தோணியில் பாஜக இருப்பதாக தெரிகிறது என்றார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும், அந்த பணம் இருந்தால், 30 ஆயிரம் பள்ளிகளை உருவாக்க முடியும் என்றார்.