"சூரிய உதயத்திற்கு முன்பு வெளியே நடக்க வேண்டாம்" "இளைஞர்களுக்கு மாரடைப்பு வரலாம்.."
குளிர் காலத்தில் இளம் வயதினருக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வடமாநிலங்களில் கடும் குளிர் வதைத்து வரும் நிலையில், மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வயதானவர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படும் சூழலில், தற்போது இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே குளிர் காலத்தில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, டெல்லியில் மேக்ஸ் மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுனர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
இதனால், சூரிய உதயத்திற்கு முன்பாக, வெளியே நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story