"பூஸ்ட், ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்லை" - மத்திய அரசு அதிரடி
அண்மையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இதுபோன்ற பானங்களில் இருந்து ஹெல்த் ட்ரிங் என்ற பெயரை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன் படி, ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்ற... பாலில் கலந்து பருகும் பவுடர் வகைகளை தயாரிக்கும் இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம், ஹார்லிக்ஸ்-ஐ ஹெல்த் ட்ரிங்க் என குறிப்பிடுவதற்கு பதிலாக, நியுட்ரிஷனல் ட்ரிங்க் என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பால் மற்றும் தானியங்களால் தயாரிக்கப்படுவதை ஹெல்த் ட்ரிங்க் அல்லது எனர்ஜி ட்ரிங் என்ற பட்டியலுக்கு கீழ் கொண்டுவரக்கூடாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story