துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய மக்கள் - பதறவைக்கும் காட்சிகள்

x

துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால், சுமார் ஆறாயிரம் கட்டடங்கள் தரை மட்டமானதாகவும், 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும்

இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட், துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால், தென்கிழக்கு துருக்கியில் 1.40 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

21 ஆயிரத்து 103 பேர் காயமடைந்தனர் என்றும், 6000 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 3 விமான நிலையங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நில நடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் அன்பான உதவியை பாராட்டுவதாக கூறிய அவர், முதல் 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்றும், இந்திய மீட்புக் குழுக்கள் களத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்