1000 போலீசார் புடை சூழ.. 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட தென் முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு உரிமை இன்று அளிக்கப்படுவதையொட்டி தென்முடியனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருத்தரப் கிராம மக்கள் கோவிலுக்கு முன் திரண்டு உள்ளதால் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி
வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி
அண்ணாமலையார் திருக்கோவில் இணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு
பொங்கல் வைத்து வழிபட தலித் இன மக்கள் தற்போது கோயிலுக்கு அருகே வந்துள்ளனர்
கோயிலுக்கு உள்ளே பட்டியல் இன மக்கள் மக்கள் சென்று சாமி தரிசனம்
பட்டியலின மக்களுடன் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஆகியோர் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம்