நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட சார் பதிவாளர்.. நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட சார் பதிவாளர்.. நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
#thanthitv
கடம்பூரை சேர்ந்த பாண்டி என்பவர் தொடர்ந்த மனுவில், சொந்த கிராமத்தில் வாங்கிய நிலத்திற்கு, மூல ஆவணங்கள் இல்லாததால் கடம்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரையா பத்திரம் செய்ய மறுத்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இதே நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் மூல பத்திரங்கள் இல்லாமல் பத்திரத்தை பதிவு செய்ய உத்தரவிட்டது. உத்தரவோடு சென்ற போதும் கடம்பூர் சார் பதிவாளர் பார்வதி நாதன் பத்திர பதிவு செய்ய மறுத்துவிட்டார் என கூறியிருந்தார்.
நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர உத்தரவிடுமாறு கேட்டிருந்தார். மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என உத்தரவிட்ட சார் பதிவாளரை 2:30 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார். நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா என கோபம் கொண்ட நீதிபதி, சார் பதிவாளர் நேரில் ஆஜரான போது, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டது ஏன்? என கேள்வியை எழுப்பினார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட சார் பதிவாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வித்தார். அதனை உடனடியாக நீதிமன்றத்தில் கட்ட உத்தரவிட்டு நீதிபதி, சம்பந்தப்பட்ட இடத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.