தமிழ் திரைப்பட கவுன்சிலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

x
  • தேர்தல் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
  • இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமிக்க உத்தரவிடக் கோரியும், கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உட்பட எட்டு தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
  • அதன் விசாரணையில், செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதாக தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் வாதிடப்பட்டது.
  • அதை ஏற்ற நீதிபதிகள் ஜனவரி மாதம் நடைபெற்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்