நெதர்லாந்தை நொறுக்கிய இந்தியா - 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் வங்கதேசத்தை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் பவுமா 2 ரன்னுக்கு வெளியேறினாலும் 2வது விக்கெட்டுக்கு கைகோர்த்த டிகாக்-ரில்லி ரூசவ் ஜோடி, வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய ரூசவ், 52 பந்துகளில் சதம் விளாசினார். மறுமுனையில் டிகாக் அரைசதம் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா, 205 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம், தென் ஆப்பிரிக்க பவுலர்களின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 101 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நோர்க்யா 4 விக்கெட்டுகளும், ஷம்ஷி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, சிறப்பான ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.