நாகைக்கு தென்கிழக்கே 330 கிலோமீட்டர் தொலைவில்... 8 மாவட்டங்களுக்கு வார்னிங்...
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கு 330 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து வருவதால், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் நள்ளிரவு மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விட்டுவிட்டு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே, தமிழக கடலோர மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், தஞ்சை, நாகை, திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story