"ரஷ்யாவை உடைக்க நேட்டோ போடும் பிளான்" - புதின் கடும் ஆவேசம்
- உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வரும் நேட்டோ அமைப்பு உக்ரைன்-ரஷ்யா போரில் மறைமுகமாக பங்கு கொள்வதாக ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக சாடியுள்ளார்...
- ரஷ்யாவை முறியடிக்க மேற்குலக நாடுகள் விரும்புவதாக குற்றம் சாட்டிய அவர், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதன் மூலம் அவை போரில் பங்கேற்று வருவதாகத் தெரிவித்தார்...
- முன்னாள் சோவியத் யூனியனையும் அதன் முக்கியப் பகுதியான ரஷ்ய கூட்டமைப்பையும் உடைப்பதை மட்டுமே மேற்கத்திய நாடுகள் ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் புதின் கடுமையாக சாடினார்...
- அமெரிக்காவை மையமாக கொண்டு உருவாகி வரும் புதிய உலகத்திற்குத் தான் தாங்கள் எதிராக உள்ளதாகத் தெரிவித்த புதின், எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Next Story