சென்னையில் போக்குவரத்து விதிமீறல்..10 நாட்களில் மட்டுமே இவ்ளோ வசூல்

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்ட 10 நாட்களில் 17 ஆயிரத்து 453 வழக்குகள் பதிவு - 1 கோடியே 41 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் - போக்குவரத்து காவல்துறை
x

வாகனத்தின் சைலன்சரை மாற்றி அமைத்து, அதிக சத்தத்தை ஏற்படுத்தியதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செல்போன் பேசியபடி வாகன ஓட்டியதாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து 62 ஆயிரத்து நூறு ரூபாய் அபராம் விதிக்கப்பட்டுள்ளது.

சீருடை அணியாத ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்களிடம் இரண்டு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாக 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது தொடர்பாக 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 591 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 37 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் ஸ்டாப் லைனில் நிற்காமல் மீறியதாக 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82,600 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர்

சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக 629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர்

போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 2678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பத்து லட்சத்து 52,800 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்