நேபாள துணை பிரதமர் பதவியை பறித்த உச்சநீதிமன்றம்
நேபாள துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான ராபி லாமிசானின் பதவியை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் பறித்துள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றிருந்தால், நேபாளத்தில் தேர்தலில் போட்டியிடவோ, பதவியில் வகிக்கவோ முடியாது. இதனால், அமெரிக்க குடியுரிமையை ராபி லாமிசான் கைவிட்டிருந்தார்.
அதே நேரத்தில், நேபாள குடியுரிமையை வாங்க ராபி லாமிசென் விண்ணப்பிக்கவில்லை.
இதனால், எந்த குடியுரிமையும் இல்லாத ராபி லாமிசானை துணை பிரதமர் பதவியில் இருந்தும், எம்பி பதவியில் இருந்தும் உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
நேபாள குடியுரிமையை பெற்ற பிறகு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Next Story