அமைச்சரான பின்.. முதல் டெல்லி பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... இன்று பிரதமருடன் சந்திப்பு
- டெல்லி சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.
- தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி சென்றார்.
- அவரை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
- பின்னர் தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், முக்கிய பிரமுகர்களும் சந்தித்து பேசினர்.
- அப்போது டெல்லி தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Next Story