கால தாமதம் செய்த பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த கல்லூரி மாணவன் - கல்லூரிக்குள்ளேயே நடந்த பயங்கரம்
- கல்லூரியின் பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவன்.
- மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்.
- சான்றிதழ் தருவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் ஆத்திரமடைந்த பார்மசி கல்லூரியை சேர்ந்த மாணவன் கல்லூரி வளாகத்திலேயே தனது முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரங்கேறியுள்ளது.
- மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பி எம் பார்மசி கல்லூரி இயங்கி வருகிறது.
- இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவரான சந்தோஷ் நேற்றைய தினம் தனது கையில் பெட்ரோல் கேனை ஏந்தி சென்று கல்லூரி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த முதல்வரை கண்டதும் அவரின் மீது பெட்ரோலை ஊற்றி தான் வைத்திருந்த சிகரெட் லைட்டரால் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி ஓடி உள்ளான்.
- இதில் 90 சதவீத தீக்காயம் அடைந்த கல்லூரி முதல்வரான 64 வயதான விமுக்தா ஷர்மா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
- இந்த சம்பவத்தில் மாணவனும் லேசான தீக்காயம் அடைய உடனடியாக அங்கிருந்த பைக்கில் தப்பி பள்ளத்தாக்கு ஒன்றில் குத்தித்து தற்கொலை செய்து செய்து கொள்ள முயன்ற மாணவனை காவல்துறையினர் காப்பாற்றி கைது செய்தனர்.
- பி பார்ம் படித்து வரும் மாணவனான சந்தோஷ் கடந்தாண்டு தனது ஏழு மட்டும் எட்டாவது செமஸ்டரில் அரியர் வைத்துள்ளான்.
- கல்லூரி சான்றிதழ் பெறுவதில் முதல்வர் காலதாமதம் செய்து வருவதாக கூறி ஆத்திரமடைந்த மாணவன் சந்தோஷ் நேற்று மாலை கல்லூரிக்கு சென்ற போது கல்லூரிக்கு வெளியே நின்று கொண்டிருந்த முதல்வரை கண்டதும் தான் கொண்டு சென்றிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான்.
- இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story