#Breaking|| கருணாநிதி பேனா சின்னம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்.. கூச்சல்.. சலசலப்பு
பேனா நினைவு சின்னம் - எதிர்ப்பும் ஆதரவும்
கருணாநிதி நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்ன கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பு.
நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பும் ஆதரவுமாக பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
முதலில் நினைவு மண்டபம் என்று சொல்லி விட்டு பிறகு பேனா நினைவு சின்னம் அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்தார்கள். இதிலேயே முரண்பாடு உள்ளது - ஆம் ஆத்மி கட்சி
கடற்கரைக்கும் நினைவு சின்னத்துக்கும் இடையிலான 350 மீட்டர் பாலம் வீணை போன்ற வடிவில் அமைக்கப்படும் என்கிறார்கள். தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லி விட்டு கர்னாடக இசையை நினைவு படுத்தும் வீனை எதற்கு? - ஆம் ஆத்மி
தமிழ் ஆங்கிலத்தில் மட்டும் நினைவு சின்னம் பற்றிய வர்ணனை போதுமானது. ஆனால் இந்தியையும் அதில் சேர்த்துள்ளார்கள். இது யாரை திருப்தி படுத்த? தமிழ் மொழிக்கான ஆட்சி என்று சொல்லி இந்திக்கு ஏன் முக்கியத்தும்? - ஆம் ஆத்மி
கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பது அவசியம் அதை வரவேற்கிறோம். ஆனால் அதை ஏன் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி கடலில் அமைக்க வேண்டும் - சட்ட பஞ்சாயத்து இயக்கம்
நினைவு சின்னம் அமைக்க வேறு இடங்களையும் தேர்வு செய்யலாம் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சொல்லியுள்ளது. வேறு இடங்களை பரிசீலனை செய்யாதது ஏன்? சட்டப் பஞ்சாயத்து இயக்கம்
கூவம் நதி கடலில் கடக்கும் இடத்துக்கு அருகில் நினைவுச் சின்னம் அமைப்பதால் அங்கிருக்கும் பல்லுயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் - சட்டப் பஞ்சாயத்து இயக்கம்
நினைவுச் சின்னத்துக்கு எதிரில் கல்வி நிறுவனமான சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளது. கட்டுமான பணிகளின் போது காற்று மாசு, ஒலி மாசு ஒளி மாசு பெரும் அளவில் ஏற்படும். இது சுற்றுச் சூழல் விதிகளுக்கு முற்றிலும் முரணானது - சட்டப் பஞ்சாயத்து இயக்கம்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் நினைவுச் சின்னத்துக்கு அனுமதி வழங்காவிட்டால் என் உயிரை மாய்த்து அந்த அனுமதிக்கு வழி ஏற்படுத்துவேன் - நொச்சிக்குப்பம் பெருமாள்
தமிழனுக்கு நினைவு சின்னம் அமைப்பதை எதிர்ப்பது தமிழர்களுக்கு அவமானம் - நொச்சிக்குப்பம் பெருமாள்
மெரினா கடற்கரை பெயரையே மாற்ற வேண்டும். கருணாநிதி மெரினா என பெயர் சூட்ட வேண்டும் - வணிகர் சங்கம்
கருத்துக்கேட்பு கூட்டத்தில் கருத்துச் சொல்ல சீமான் நேரடியாக பங்கேற்பு. தி.மு.க. தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளதால் பெரும் பரபரப்பு
மேடையில் அரசியல் பேச வேண்டாம் என கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தும் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்
நினைச்சின்னம் அமைப்பது தவறானது. அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதி அனைவருக்கும் நினைவிடங்கள் உள்ளது. யாருக்கும் கடலுக்குள்ளே நினைவு சின்னம் கிடையாது - பா.ஜ.க.
சுனாமி வந்தபோது தடுப்புச்சுவர் கட்டினோம். பேனா நினைவு சின்னம் கட்டுவதில் தவறில்லை. இது தமிகத்துக்கு ஒரு பெரும் அடையாளம் - ராயபுரம் மீனவர் இளங்கோ