கள்ளக்குறிச்சி பள்ளிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மார்ச் மாதத்தில் இருந்து முழுமையாக திறக்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கடந்த ஜூலை மாதம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
- மாணவி மரணத்தால் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி மூடப்பட்டது. இது தொடர்பான வழக்கில், பள்ளி அமைதியான சூழலில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- அதேநேரம், நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் பின்பற்றப்பட்டதாகவும், பள்ளியை முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் எல்கேஜி முதல் 4ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் செயல்படவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
- அதை ஏற்ற நீதிமன்றாம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளியில் நேரடி வகுப்புகள் முழுமையாக செயல்பட உத்தரவிட்டதுடன், பள்ளியின் மூன்றாவது தளத்துக்கு மட்டும் வைக்கப்பட்ட சீல் நீடிக்கும் என்றது.
- அதேநேரம் பள்ளியை திறப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
Next Story