"நனவாகுது பெருங்கனவு..." - விண்ணில் பாய்கிறது பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்..!

x
  • அரசுப்பள்ளி மாணவர்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட 150 சிறிய ரக செயற்கைக்கோள்கள் வரும் 19ம் தேதி மாமல்லபுரத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்புகளின் உதவியுடன் பள்ளி மாணவர்கள் செயற்கைகோளை உருவாக்கியுள்ளனர்.
  • இரண்டரை கோடி ரூபாய் செலவில் மாணவர்கள் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • இது குறித்து பேசிய அப்துல் கலாம் அறக்கட்டளை நிர்வாகி ஷேக் சலீம், காற்றில் உள்ள மாசு அளவு, காற்றின் தரம், வெப்பநிலை, ஆக்சிஜன் மற்றும் கதிர்வீச்சின் அளவுகளின் தகவல்களை சிறிய ரக செயற்கைகோள்கள் சேகரிக்கும் என தெரிவித்தார்.
  • செயற்கை கோள் ஏவும் நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ அதிகாரிகள், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்