அதிகாலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி.. 7 மாதத்திற்கு பின் எகிறிய சிலிண்டர் விலை - பின்னணியில் 3 மாநில தேர்தலா?

x
  • வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 118 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
  • மேலும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் 223 ரூபாய் உயர்த்தப்பட்டு இரண்டாயிரத்து 268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • இரண்டாயிரம் ரூபாய்க்கு கீழ் இருந்து வந்த வணிக சிலிண்டர் ஒன்றின் விலை, 2021 ஆம் ஆண்டு தீபாவளி சமையத்தில் இரண்டாயிரத்தை கடந்து சிறு சிறு வணிகர்களை களங்க செய்திருந்தது.
  • அதன் பிறகு உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக சென்ற ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இரண்டாயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது.
  • இதனால் ஹோட்டல்களில் டீ, காபி முதல் உணவு வகைகளின் விலை உயர்ந்து, பாமர மக்களுக்கும் மேலும் நெருக்கடியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு படிப்படியாக குறைந்து வந்த வர்த்தக சிலிண்டரின் விலை...
  • தற்போது 223 ரூபாய் உயர்ந்து, இரண்டாயிரத்து 268 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • கடந்த 7 மாதங்களாக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது 3 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • இன்று முதல்...
  • சமையல் சிலிண்டரின்
  • விலை - ரூ.1,118
  • இன்று முதல்...
  • வணிக சிலிண்டரின்
  • விலை - ரூ.2,268

  • வணிக சிலிண்டர் விலை உயர்வு!
  • நவ. 2021 - ரூ.2,133
  • மே 2022 - ரூ.2,508
  • ஆக. 2022 - ரூ. 2,141
  • நவ., 2022 - ரூ.1893
  • ஜன., 2023 - ரூ. 1,917
  • மார்ச்., 2023 - ரூ.2,268

  • சமையல் சிலிண்டர் விலை உயர்!
  • ஜன. 2021 - ரூ.710
  • அக்.2021 -ரூ.915
  • மே 2022 - ரூ.1,015
  • ஜூலை 2022 - ரூ.1,068
  • மார்ச், 2023 - ரூ.1,118

Next Story

மேலும் செய்திகள்