அனல் பறக்கும் FIFA உலக கோப்பை! - வாழ்வா சாவா போராட்டத்தில் ஜெர்மனி | fifa world cup | thanthi tv
உலகக்கோப்பை கால்பந்து - இன்றைய ஆட்டங்கள்
கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இ பிரிவில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கோஸ்டாரிகாவுடன் ஜப்பான் மோதுகிறது. முதல் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான் கோஸ்டாரிகாவை எளிதில் வீழ்த்தக்கூடும். இதேபோல் எஃப் பிரிவில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொராக்கோவுடன் பெல்ஜியம் மோதவுள்ளது. இதே பிரிவில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் குரேஷியாவும் கனடாவும் மோதுகின்றன. முதல் போட்டியில் தோல்வி அடைந்த கனடாவிற்கு இந்தப் போட்டி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சமபலம் ஸ்பெயின்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஜெர்மனிக்கு இந்தப் போட்டி வாழ்வா? சாவா? ஆட்டமாகும்.
Next Story