விறுவிறுப்பான ஈரோடு இடைத்தேர்தல்.. தேர்தல் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு - துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

x
  • ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில், வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுகவினர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிமனைகள் மற்றும் திருமண மண்டபங்களில் பொதுமக்களை அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
  • இதனையடுத்து, துணை ராணுவ படையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு திடீரென ஆய்வு செய்தனர்.
  • 50க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்