🔴LIVE : நிலநடுக்கத்தால் சிதைந்த துருக்கி - நெஞ்சை உலுக்கும் கோர காட்சிகள் | Turkey
துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வால் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இடிபாடுகளில் சிக்கி 53 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கட்டிடங்களில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
எனவே இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேதமடைந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.