மீண்டும் உயிர் பலி வாங்கிய கொரோனா..திடீரெனெ ஏற்பட்ட மூச்சுத்திணறல்... பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்... திருச்சியில் பரபரப்பு
- திருச்சியில் உயிரிழந்த இளைஞர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
- பெங்களூரில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த இளைஞர், கோவாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு, கடந்த 9 ஆம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.
- இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.
- இறப்பதற்கு முன்பு அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையின் அறிக்கையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
- இதனிடையே உயிரிழந்த இளைஞரோடு கோவா சென்ற நால்வரையும், அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Next Story