சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - இத்தனை கோடிக்கு ஒப்பந்தமா?
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 134 புள்ளி 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், பவர் ஹவுஸ் ஸ்டேஷன் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான 4-ஆவது வழித்தடத்தில், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், பூந்தமல்லி பணிமனையும் வரவுள்ளன.
இந்த வழித்தடத்தில் மின்சாரம் மற்றும் அனைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு வோல்டாஸ் நிறுவனத்துக்கு 134 புள்ளி 9 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, வோல்டாஸ் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி தலைவர் ஜெயந்தி தேஷ்பாண்டே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
Next Story