தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு ரிட் மனு
- தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
- இதுதொடர்பாக தெலங்கானா தலைமைச் செயலர் ஏ.சாந்திகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில்,
- தெலங்கானா முனிசிபல் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதியில் இருந்து ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆளுநர் சுயமாக செயல்படக்கூடாது என்பதை ஷம்சீர் சிங் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது என்றும், மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும்போது, அதற்கு ஆளுநர் மறுப்பு கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
- எனவே, ஆளுநரின் செயல்பாட்டை சட்ட விரோதமான, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவித்து, நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
- இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story