"குமரியில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை" - திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
- அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரே கட்சி பாஜக என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
- சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
- அப்போது பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கும், பட்டியலினத்தவருக்கும் எதிரானவர் என தவறான கருத்து முன்வைக்கப்படுவதாக கூறிய அவர், சிறுபான்மையினர் அதிகம் வாழும் உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வருவதை சுட்டிக்காட்டினார்.
- குமரியில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த அவர், இந்திய குடியரசு கட்சியுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு திருமாவளவன், மற்றும் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
Next Story