5 ரூபாய் டாக்டர் மறைவு.. உயிர் பிரியும் கடைசி நொடி வரை சேவை - ஊர் ஊராக வந்து கண்ணீர் அஞ்சலி
கடலூரில், ஏழை எளிய மக்களுக்காக 5 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தாச்சாரியார். 1932-ஆம் ஆண்டு பிறந்த இவர், 1990-ஆம் ஆண்டு வரை ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனை மருத்துவராக 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு தனது வீட்டிலேயே ஏழை, எளிய மக்களுக்காக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
தொடர்ச்சியாக தனது 91 வயது வரை இவர் மருத்துவ சேவையாற்றி இருக்கிறார்.
இவருக்கு 3 முறை இருதய அறுவை சிகிச்சை செய்த நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story