162 பேரின் உயிரை பறித்த நிலநடுக்கம்.. நிலைகுலைந்து போன கட்டிடங்கள் - இந்தோனேசியாவில் பயங்கரம்

x

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5 புள்ளி 6ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் இதுவரை 162 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 326 பேர் காயமடைந்து உள்ளதாகவும், மேற்கு ஜாவாவின் ஆளுநர் ரித்வான் கமில் உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதோடு, பொதுமக்களின் உடமைகள் மற்றும் கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்