திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் டிசம்பர் 6ம் தேதி ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளனர்.


தீபம் ஏற்றப்படும் போது 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்களும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால், பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துறை முடிவெடுத்துள்ளது.


குறிப்பாக திருவண்ணாமலைக்கு காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்