என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு

x

கேரளாவில் 25 பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பு இன்று பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மையங்களில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அந்த அமைப்பின் தலைவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த 25 பேரில் 14 பேரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்கவும் என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, இன்று கேரளா முழுவதும் பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்