🔴LIVE : கடலூரில் முழு கடை அடைப்பு - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு
- பாமக தலைவர் அன்புமணி - செய்தியாளர் சந்திப்பு
- "முழு அடைப்பு போராட்டம்- மக்களை அவதிப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை"
- என்எல்சி நிர்வாகத்திற்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது
- கடலூரில் நடைபெறும் அவலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே முழு அடைப்பு போராட்டம்
- முழு அடைப்பு போராட்டத்தின் நோக்கத்தை வணிகர்கள், வியாபாரிகள் உணர்ந்துள்ளனர்
- நெய்வேலி அருகே உள்ள 15 கிராமங்களின் பிரச்சினை மட்டுமில்லை
- ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு பிரச்சினை கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது
- விவசாயிகள், மக்களை துன்புறுத்தி நிலத்தை கையகப்படுத்துகிறார்கள்
- என்எல்சியால் 5 மாவட்ட மக்களுக்கு பாதிப்பு- அதை தடுக்க பாமக போராடி வருகிறது
- என்எல்சியால் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் 1000 அடிக்கு கீழே சென்றுவிட்டது
- பழுப்பு நிலக்கரியை அடுத்த 30 ஆண்டுகளுக்கு என்எல்சி எடுக்கலாம்/
- அடுத்த ஆண்டிற்குள் என்எல்சியை தனியாருக்கு விற்க போகிறோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது
- தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ள என்எல்சிக்காக அரசு நிலத்தை கையகப்படுத்துவது ஏன்?
- ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை
- வேலை வழங்காமல் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதால் என்எல்சியை எதிர்க்கிறது பாமக
- என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் முரண்பாடான கொள்கையை கடைபிடிக்கும் அரசு