🔴LIVE : அதானி விவகாரம் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த ராகுல்காந்தி

Update: 2023-02-07 09:28 GMT

Eமக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்ச

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேச்சு

ஒற்றுமை யாத்திரையில் பல விஷயங்களை கற்று கொண்டேன்

மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது

யாத்திரையின் தொடக்கத்தில் சிறிது கடினமாக இருந்தது/நான் நடக்கும்போது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்தனர்

விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்

வேலையில் இருந்து பலர் அகற்றப்பட்டு வருவதாக இளைஞர்கள் வேதனை தெரிவித்தனர்

வேலை கிடைக்காதவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டியிருந்தது

அக்னிபத் திட்டம் குறித்து என்னிடம் இளைஞர்கள் அதிருப்தி தெரிவித்தனர்

தமிழ்நாடு, கேரளா முதல் காஷ்மீர் வரை எல்லா இடங்களிலும் அதானி மட்டுமே

பல்வேறு துறைகளிலும் இன்று அதானி குழுமம் நுழைந்து விட்டது

அதானியின் சொத்து மதிப்பு ஒரு சில ஆண்டுகளிலேயே 140 பில்லியன் டாலராக எப்படி மாறியது?

நான் சாலையில் சென்றபோது, அந்த சாலையை போட்டதும் அதானி என்று கூறுகின்றனர்

எந்த தொழிலை அதானி மேற்கொண்டாலும் அதில் தோல்வியே அடைவதில்லை

எல்லா தொழிலிலும் வெற்றி மட்டுமே பெறுகிறார், இது என்ன மேஜிக் என்று தெரியவில்லை

குடியரசு தலைவர் உரையில் வேலையின்மை, விலைவாசி குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை

பிரதமர் மோடி மற்றும் அதானி இடையேயான உறவு குறித்து இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்

பிரதமர் மோடி, அதானி இடையேயான உறவு பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது

Tags:    

மேலும் செய்திகள்