ட்ரம்ப் வெற்றிய விடுங்க.. இந்திய வம்சாவளியினர் US-ல் செய்த தரமான சம்பவம்.. கொடி பறக்குதா..!

Update: 2024-11-07 06:53 GMT

அமெரிக்க தேர்தலில், பிரதிநிதிகள் சபையில் 6 இடங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர் இந்திய வம்சாவளியினர்...அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 அமெரிக்க இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்...

விர்ஜினியாவில் இந்திய அமெரிக்க வழக்கறிஞர் சுஹாஸ் சுப்பிரமணியம் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் கிளான்சியைத் தோற்கடித்தார்... விர்ஜினியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்துள்ளார்... இவரது வெற்றியால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உள்ள இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது... சுஹாஸ் சுப்பிரமணியம் முன்பு ஒபாமா அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்... அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், ஸ்ரீ தானேதர் ஆகிய 5 இந்திய வம்சாவளியினரும் மீண்டும் தேர்தலில் வென்று பிரதிநிதிகள் சபையில் இடம்பெறுகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்