வெடித்து சிதறிய 12-வது மாடி - துள்ளத் துடிக்க பறிபோன உயிர்கள் | Taiwan | Super Market

Update: 2025-02-13 12:17 GMT

தைவானில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தைசுங் (TAICHUNG) நகரில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில், 12ஆவது மாடியில் கேஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த கட்ட‌டத்தில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்