கோலாகலமாக நடைபெற்று வரும் கச்சத்தீவு
அந்தோணியார் ஆலய திருவிழாவில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில்
புனித அந்தோணியார் ஆலய திருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இருநாட்டு பக்தர்களும் ஜெபமாலையை சுமந்து வந்த சிலுவை பாதை நிகழ்ச்சியும், நற்கருணை ஆராதனையும், அந்தோணியார் தேர் பவனியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.