பற்றியெரியும் தென்கொரியா... எங்கும் சாம்பல்மேடு - உயிரை பிடித்து ஓடும் மக்கள்
தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது. 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளதால், காட்டுத்தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.