இதுவரை நடந்ததிலேயே இன்று நடந்தது தான் பெரிய தாக்குதல்.. வெளிவந்த கொடூர முகம்.. ஆரம்பித்த ஆட்டம்
ரஷ்யா, உக்ரைன் இடையே 2022ம் ஆண்டு போர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தாக்குதல் மிகப் பெரியதாக கருதப்படுகிறது. மொத்தம் 34 ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் பிராந்தியத்தில் உள்ள ராமென்ஸ்காய், கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 12 ட்ரோன்கள் வழியிலேயே அழிக்கப்பட்டதாகவும் மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். இதனால் டொமோடெடோவோ மற்றும் Zhukovo ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.