சுனிதானா சும்மாவா..! விண்வெளியில் மாஸ் Vibe.. -`0' ஈர்ப்பு விசையில் உற்சாக துள்ளல் நடனம்

Update: 2024-06-08 15:00 GMT

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நடனமாடியபடி உற்சாகமாக நுழைந்துள்ளார்... சுனிதாவின் விண்வெளி பயணம் பற்றிய ஒரு சுவையான செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

"எனது விண்வெளிப் பயணம் மக்களைப் பற்றிய எனது பார்வையையே மாற்றிவிட்டது... பூமியைப் பார்க்கும்போது, ​​​​எல்லைகளையோ அல்லது வெவ்வேறு தேசங்களைக் கொண்ட மக்களையோ என்னால் பார்க்க முடியவில்லை... அப்போதுதான் நான் உணர்ந்தேன்... நாம் அனைவரும் மனிதர்கள்... இந்தப் பிரபஞ்சத்தின் குடிமக்கள்... என்பதை..."

பிரபஞ்சத்தின் முன்னால் நாம் ஒரு சிறு புள்ளி கூட இல்லை என்பதை அழகாக உணர்த்தும் ஆழமான சுனிதா வில்லியம்சின் வார்த்தைகள் இவை...

அமெரிக்காவின் Ohio மாகாணத்தில் இந்திய-அமெரிக்க நரம்பியல் நிபுணரான தீபக் பாண்டியாவுக்கும் ஸ்லோவேனிய-அமெரிக்கரான உர்சுலின் போனிக்கும் பிறந்த சுனிதா வில்லியம்ஸ் இளவயது முதலே விண்வெளி மீது தீராக் காதல் கொண்டவர்...

முதல் விண்வெளிப் பயணம் 2006ல்...2வது பயணம் 2012ல்...

322 நாள்கள் விண்வெளியில் தங்கி இருந்தவர்...விண்வெளியில் முதன்முதலில் மாரத்தான் ஓடியவர்...விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் மேற்கொண்டவர் என்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் சுனிதா வில்லியம்ஸ்...

விண்வெளிக்குச் செல்வதே சாதனை...ஆனால் சுனிதாவோ சோதனை மிஷனில் விண்கலத்தை இயக்கிய முதல் பெண்மணி என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்...

3வது விண்வெளிப் பயணம் பல்வேறு காரணங்களால் 3 முறை ஒத்திப் போகவே... இதோ எல்லாம் சரியாய் அமைந்ததும் விருட்டென விண்வெளிக்குப் புறப்பட்டு விட்டார் சுனிதா...

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அட்லஸ் 5 ராக்கெட்டில் போயிங் ஸ்டார்லைனரில் ஸ்டைலாக சக விண்வெளி வீரரான வில்மோருடன் பயணத்தைத் துவங்கினார்... இந்தப் புதிய விண்கலத்தில் செல்லும் முதல் வீராங்கனை சுனிதா தான்...

Tags:    

மேலும் செய்திகள்