நபரை காணாமல் தேடிய குடும்பம்... 2 நாளுக்கு பின் லிப்ட்டில் இருந்த.. இப்படியும் நடக்கலாம்..

Update: 2024-07-16 06:57 GMT

நபரை காணாமல் தேடிய குடும்பம்... 2 நாளுக்கு பின் லிப்ட்டில் இருந்த.. இப்படியும் நடக்கலாம்.. அதிர்ச்சி காட்சி

கேரளாவில் மருத்துவமனை லிஃப்டில் சிக்கியவர் 2 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் என்பவர், மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சனிக்கிழமை சென்றுள்ளார். மருத்துவமனையின் முதல் தளத்திற்கு செல்வதற்கு அவர் லிப்டில் ஏறிய பிறகு அந்த லிப்ட் வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. உதவிக்காக கூச்சலிட்டும் அது யாருக்கும் தெரியாததால் யாரும் வரவில்லை. தொலைபேசியில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து அவரை காணவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் காலையில் லிப்ட் ஆபரேட்டர், சரிபார்ப்பு பணிக்காக இயக்கியபோது அதில், ரவீந்திரன் சிக்கியிருந்தது தெரியவந்தது. பின் அவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்