டிரம்ப்பை அப்பட்டமாக கிண்டல் செய்த எலான் மஸ்க் | Donald Trump | Elon Musk | Thanthi TV
அமெரிக்க அரசுத்துறை இணையதள பக்கத்தில் “ட்ரான்ஸ்“ Trans என தேடினால், “ட்ரைன்ஸ்“ Trains என பரிந்துரைப்பதை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார்... அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அனுமதி என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ராணுவத்தில் உள்ள மாற்று பாலினத்தினர் மாற்றப்பட்டு வருகின்றனர். திருநங்கை சிறைக்கைதிகள் ஆண்கள் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இந்த சூழலில், அரசு இணையதள பக்கத்தில் மாற்று பாலினத்தவரைக் குறிக்கும் “ட்ரான்ஸ்“ Trans என தேடினால், “ட்ரைன்ஸ்“ Trains என பரிந்துரைப்பதை, எலான் மஸ்க், "That train has left" அதாவது அந்த ரயில் புறப்பட்டு விட்டதாக கிண்டல் செய்துள்ளார்.