அச்சுறுத்த வந்த கொரோனாவை மிஞ்சும் கொடிய சீன வைரஸ்...மரணம் நிச்சயம்?எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
HMPV எனப்படும் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன... கொரோனா வைரசைப் போலவே காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்ட இந்த மனித மெட்டாப் நியூமோ வைரசால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பலர் இறப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. இதனால் சீனாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் நிலையில், இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை... HMPV வைரசைப் போலவே, இன்ஃப்ளூயென்சா ஏ, மைகோப்ளாஸ்மா நிமோனியா, மற்றும் கொரோனாவும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் இதுபோல் அதிக வைரஸ் பரவல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story